இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

Updated: Mar 23, 2019, 08:59 AM IST
இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சூரிய சந்திர ராவ் தலைமை தாங்கினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,

இந்தியாவில் கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.