வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு சிறை - லைக்குக்காக லைப்-ஐ தொலைச்சிட்டாங்க

இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசை கட்டி,தெற்கு திசையில் இவனைப் பற்றி கேளு தூளு  கிளப்புறவன் தூத்துக்குடி ஆளு என தல அஜித் பாட்டுபோட்டு இணையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட திசையன்விளை இளைஞர்கள் இருவரை பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 14, 2023, 03:53 PM IST
  • பட்டாசுடன் வீலிங் செய்த இளைஞர்கள்
  • பொறிவைத்து தூக்கிய காவல்துறை
  • லைசென்ஸ் ரத்து - காவல்துறை விசாரணை
வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு சிறை - லைக்குக்காக லைப்-ஐ தொலைச்சிட்டாங்க title=

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருசக்கர வாகனத்தில் பட்டாசை கட்டி  தீப்பொறி  பறக்க சென்ற இரண்டு இளைஞர்களை திசையன்விளை போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோவாக எடுத்து அடுத்தவர்களை கவருவதற்காகவும் , தங்களையும் திரைப்பட  ஹீரோக்கள் போன்று காட்டி லைக்குகள் பெறுவதற்காகவும், சமூகவலைதளங்களில் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் - முன்விரோதத்தில் வெறிச்செயல்

குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண் கொத்தி பாம்பு போல் கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளியையொட்டி நெல்லை மாவட்டம் திசையன்விளையில்  YAMAHA MT 15 வாகனத்தில்லைட் எரியும் பகுதியை சுற்றி பட்டாசை கட்டி வைத்து அதை பற்ற வைத்து சாலையில் இளைஞர்கள் வீலிங் செய்தனர்.

மேலும், அந்த வீடியோவை தல அஜித்தின் " தீபாவளி தல தீபாவளி "  என்ற பாட்டுடன சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய திசையன்விளையை சேர்ந்த சுஜின் மற்றும் மணிகண்டன் ஆகியோரை இன்று காலையில் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அடுத்தக்கட்ட விசாரணையும் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க |  பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News