ஓபிஎஸ் தான் ஜல்லிக்கட்டு நாயகர்: விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர்

தன்னை ஏன் ஜல்லிகட்டு நாயகர் என மக்கள் அழைக்கிறார் என்பதற்கான விளக்கம் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பி எஸ், காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியவர் என்று பெருமிதப்படுகிறார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 28, 2022, 03:17 PM IST
  • ஜல்லிகட்டு நாயகர் ஓ பி எஸ்
  • பட்டப் பெயர் வந்தது எப்படி?
  • விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர்
ஓபிஎஸ் தான் ஜல்லிக்கட்டு நாயகர்: விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர் title=

சென்னை: ஜல்லிகட்டு நாயகர் என தனக்கு பட்டப்பெர்யர் இருப்பது பெருமையளிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தான் இளம் வயது காளையாக இருந்தபோது ஜல்லிகட்டில் பல காளைகளை அடக்கியிருப்பதாக எதிர்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் (O.Panner Selvam) தெரிவித்தார்.

சட்டபேரவையில் ஜல்லிகட்டு யாருடைய ஆட்சி காலத்தில் தடை செய்யபட்டது யாருடைய ஆட்சியில் ஜல்லிகட்டு பெறபட்டது எனற வாதம் நடைபெற்றது அப்போது செய்தித்தறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக உறுப்பினர்கள் எல்லாம் ஜல்லிகட்டு நாயகர் ஜல்லிகட்டு நாயகர் என்று அழைக்கின்றனர், அவர் எத்தனை ஜல்லிகட்டில் கலந்துகொண்டு காளைகளை அடைக்கினார் என செய்தித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பினார்,

ops

இதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம், இளம் வயது காளையாக இருந்தபோது, தான் பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாகவும் தெரிவித்தார்.

அதோடு திமுகவுக்கு குட்டு வைக்கும் வகையில் பேசிய ஜல்லிக்கட்டு நாயகர் ஓபிஎஸ், திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காளையை விலங்குகள் பட்டியலில் சேர்ததால்தான் ஜல்லிகட்டு நடத்த மூடியாமல் போனது என்றார்.

jallikattu

அதனால் தான், தங்கள் அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் பிறகு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று  ஜல்லிகட்டிற்க்கு அனுமதி வாங்கியதை குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் மோடி - முதல்வர் முக ஸ்டாலின்

அதன்பிறகுதான், தமிழகத்தில் ஜல்லிகட்டு நடைபெற்றதாக கூறினார், அப்போது குறிகிட்ட காங்கிரஸ் கட்சிகுழு தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் திமுக ஆட்சியிக் ஜல்லிகட்டை தடை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

பீட்டா மற்றும் பூளுகிராஸ் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு தடைபெற்றதாக விளக்கம் அளித்தார்.

அதோடு ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய செல்வ பெருந்தகை, ஜல்லிகட்டு விளையாட்டை மீண்டும் தமிழகத்திற்கு பெற்று கொடுத்தது அதிமுக அல்ல என்றும், மக்கள் போராட்டமே, ஜல்லிகட்டு வீர விளையாட்டை இன்று தமிழக மக்கள் பெற்றதற்கு காரணம் என்று சொன்னார்.

மேலும் படிக்க | தங்கம் விலையில் அதிரடி சரிவு: நகை வாங்க படையெடுக்கும் மக்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News