பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலி இடங்கள், குறைகிறதா மவுசு: அமைச்சர் பொன்முடி பதில்

சிறந்த மற்றும் தாமதமில்லா வேலை வாய்ப்புகளே, பலர் இந்த பிரிவை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 12:16 PM IST
  • பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிகரிக்கும் காலி இடங்கள்
  • இதன் காரணம் என்ன?
  • அமைச்சர் விளக்கம்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலி இடங்கள், குறைகிறதா மவுசு: அமைச்சர் பொன்முடி பதில் title=

பத்தாம் வகுப்பு முடித்தவுடன், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. பாலிடெக்னிக் மூலம் தொழில்நுட்ப படிப்புகளுக்கான டிப்ளமா பட்டம் பெற்றவர்களுக்கு உடனடியாக வேலைகளும் கிடைத்தன.

சிறந்த மற்றும் தாமதமில்லா வேலை வாய்ப்புகளே, பலர் இந்த பிரிவை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது. பாலிடெக்னிக்கில் டிப்ளமா முடித்து பொறியியல் படிப்புகளில் சில மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்ந்து பி.டெக் படிப்பைத் தொடர்ந்தனர். எனினும், கடந்த சில ஆண்டுகளில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  

தமிழகம் முழுவதும் உள்ள  பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,10,215 இடங்கள் நிரப்படாமல் காலியாக உள்ள நிலையில், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.

உதகமண்டலம் தொகுதி, குந்தா வட்டம், மஞ்சூரில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்க அரசு ஆவன செய்யுமா என உதகமண்டலம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ‘மாணவர்கள் தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் பல பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைவாக நிரம்பியுள்ளன.

மேலும் படிக்க | தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; மயிலாடுதுறையில்ன் பரப்பரப்பு

உதகமண்டலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 750 இடங்களில் 265 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர் 455 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள  பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1 67,000 மொத்த இடங்களில் 1,10,215 இடங்கள் நிரப்படாமல் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கோடநாடு வழக்கு : 217 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News