கரும்பு விவசாயிகள் வளம்பெற, வெல்லம் தாருங்கள்! - மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Last Updated : Dec 30, 2017, 06:52 PM IST
கரும்பு விவசாயிகள் வளம்பெற, வெல்லம் தாருங்கள்! - மு.க.ஸ்டாலின் title=

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கள் பரிசாக 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"கரும்பு விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவும், கிராமங்களில் சிறு தொழிலாக செய்யப்படும் வெல்ல உற்பத்தி மேம்படவும், இந்த வருடம் பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள பொருட்களில் சர்க்கரைக்குப் பதில் தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டது போல் வெல்லம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்!

Trending News