ரக்ஷா பந்தன் விழாவிற்கு மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பெண்களுக்கு கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தை முன் வைக்கின்றனர் அதிகாரிகள்.
அதன்படி 854 சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு கழிப்பறை கட்டித்தருவார்கள். இதை அவர்கள் தங்களது சொந்தச் செலவில் செய்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு தாலுக்காக்கள், ஒன்றியங்களிலிருந்து இவர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.
கட்டிய பின்னர் குலுக்கள் முறையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். ரொக்கப்பரிசாக ரூ. 50,000 மும் மொபைல் போன்களும் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் சமூக அமைப்புகள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில கட்சிகள் என பல தரப்பினரும் தீவிரமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மணப்பாறை உள்ள பர்னிச்சர் மற்றும் மெட்டல் விற்பனை நிலையத்தினர் இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் மற்றும் பேனா பரிசு வழங்கிய போலீசார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலை விதிமுறைகளை மீறியதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு தெரிவித்த போக்குவரத்து போலீசார் பேனா மற்றும் சாக்லெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் டோனியின் சாதனைகளை குறிக்கும் வகையில் 4- சில்வர் ஸ்டார் பரிசு அளித்தனர்.
இந்தியா வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது. இவ்விரு அணிகள் மோதிய 3-வது டி-20 போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது.
இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக்காக பிரதமர் மோடி 4 கோடி ருபாயாக மாநிலத்தில் ஹரியானா பொன்விழாவில் பரிசாக அளித்தார். 2012 ல் அர்ஜுனா விருது பெற்றார் தீபா.
உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. அமெரிக்க நாட்டை சேர்ந்த பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் நோபல் பரிசு வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.