சின்னதிர நடிகை சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, அவரது கணவர் ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக, பதில் மனுத்தாக்கல் செய்துள்ள சித்ராவின் தந்தை கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையின் காரணமாகவே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மேலும் ஹேம்நாத் மனுவுக்கு பதிலளித்து காமராஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதாகவும், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சித்ராவின் மரணம் எப்படி நடந்தது? நிபுணர் குழு அறிக்கையில் அதிர்ச்சி..
மேலும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என துன்புறுத்தியதாகவும், சித்ராவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஹேம்நாத் தொல்லை கொடுத்ததாகவும் சித்ராவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சித்ராவின் தந்தை, ஹேம்நாத்துக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அவர் விசாரணையை எதிர்கொள்வதே சரியானது என்பதால் வழக்கை ரத்து செய்யக்கோரிய ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | #VjChitra: முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் வாடிய மலராய் உதிர்ந்த சித்ரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR