உபியில் இருந்து போதை மருந்து சப்ளை.. 7 மாத ஸ்கெட்ச் - முக்கிய புள்ளியை தூக்கிய தமிழக காவல்துறை

உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்த நபரை தீரன் பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2024, 10:23 AM IST
  • உத்தரப்பிரதேசத்தில் இருந்து போதை மருந்து சப்ளை
  • தீரன் பட பாணியில் ஸ்கெட்ச் போட்ட காவல்துறை
  • முக்கிய குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தது
உபியில் இருந்து போதை மருந்து சப்ளை.. 7 மாத ஸ்கெட்ச் - முக்கிய புள்ளியை தூக்கிய தமிழக காவல்துறை title=

Tamil Nadu police drug bust : தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. ரவுடிகளின் சமூகவிரோத செயலுக்கும், போதை மருந்துகளின் விற்பனையும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இருப்பதால், இவற்றை ஒருசேர ஒடுக்க தமிழ்நாடு காவல்துறை தகவல்களை சேகரித்துக் கொண்டு, நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட போதை மருந்துகளையும், அந்த நெட்வொர்க்கில் இருப்பவர்களையும் காவல்துறை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது. 

தமிழக காவல்துறை தீவிர விசாரணை

சென்னை தண்டையார்பேட்டை மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சீனிவாசன், ஶ்ரீபன், சபீர், விஸ்வநாதன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 621 மாத்திரைகளை பறிமுதல் செய்ததுடன் சமூகவிரோத செயலில் ஈடுபட்ட அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தியாமார்ட் என்ற வெப்சைடில் இவர்கள் மாத்திரை வாங்குவது தெரிய வந்தது. மேலும், இவர்களுக்கு யார் மாத்திரைகள் சப்யை செய்கிறார்கள் என விசாரணையையும் காவல்துறையினர் தீர விசாரித்து கண்டுபிடித்தனர்.

மேலும் படிக்க | புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்

உத்தரப்பிரதேச சிறையில் முக்கிய புள்ளி

அவர் பெயர் விபிள் திவாரி(40) என்பதும், உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் குறித்த தகவல்களை தமிழ்நாடு காவல்துறை சேகரிக்க தொடங்கியது. விபிள் திவாரி டெல்லியின் மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு  போலீசாரால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளோடு கைது செய்யப்பட்டு உத்திர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்ட சிறையில் இப்போது அடைக்கப்பட்டிருக்கிறான். இது குறித்து தமிழ்நாடு காவல்துறைக்கு தெரியவரவே, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் மூலம் வாரண்ட் பெற்று, இங்கிருந்து உத்திதபிரதேசம் சென்ற வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் தலைமையிலான தனிப்படையினர் சிறையில் இருந்த விபிள் திவாரியை கைது செய்து சென்னை அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்தனர்

சுமார் 7 மாதங்களாக பின் தொடர்ந்த போலீசார் வடசென்னை பகுதிகளுக்கு ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த வட இந்தியரை சிறையில் இருந்தபடியே தீரன் பட பாணியில் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க | கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா? - ஸ்டாலினை விளாசிய சீமான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News