NTK Seeman Slams DMK Government: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பிரபல யூ-ட்யூபருமான சாட்டை திருமுருகனை (Sattai Duraimurugan) காவல்துறையினர் தென்காசி மாவட்டம் குற்றலாத்தில் வைத்து கைது செய்தனர்.
இதுகுறித்து சென்னையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,"எதற்காக துரைமுருகனை இந்த அரசு கைது செய்திருக்கிறது. என்னைவிடவா அதிகமாக பேசிவிட்டார். என்னைச் சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்கள்.
'புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா...?'
அவர் பேசியது அவதூறு இல்லை, அது ஏற்கெனவே இருக்கும் பாடல்தான். அந்த பாட்டை பாடினால் கைது செய்வீர்கள் என்றால் தற்போது அதே பாட்டை பாடுகிறேன் என்னை கைதுசெய்யுங்கள்" எனக்கூறி அந்த பாடலை பாடியும் காண்பித்தார். மேலும், புள்ளப்பூச்சிகளைதான் நீங்கள் கைது செய்வீர்கள் என்றும் பாம்பு, தேள், நட்டுவாக்காலிகளை கைது செய்ய தைரியம் இருக்கிறதா... புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா... முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்றார்.
மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!
கருணாநிதி மீதும் கடும் தாக்கு
தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் சீமான் தாக்கி பேசினார். அதில்,"அதிகாரத்திற்கு வந்துவிட்டபின் உங்கள் தந்தைக்கு புனிதர் பட்டம் கட்டிவிடுவீர்களா...? செய்த துரோகம் மறந்துவிடுமா...? தமிழர் இன அரசியல் வரலாற்றில், தீய ஆட்சியின் தொடக்கம், தீய அரசியலின் தொடக்கம் கருணாநிதியின் வருகைக்கு பின்னர்தான். யாராவது மறுக்க முடியுமா, பேரறிஞர் அண்ணா வரை இந்த அரசியல் வரலாறை எடுத்துப் பாருங்கள், எவ்வளவு கண்ணியம், நாகரீகம் இருந்தது.
இவர் வந்தபின்னர் பாருங்கள் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அநாகரீக அரசியல், அவதூறு பேச்சுகள், சாராயம் ஆகியவை வந்தன. முன்னாள் முதலமைச்சர் குறித்து பேசவே கூடாதா... முன்னாள் முதல்வர் இபிஎஸ் குறித்து முதல்வர் ஸ்டாலினும்தான் பேசியுளளார்... நீங்கள் பேசினால் கருத்துரிமை, நாங்கள் பேசினால் அது அவமரியாதையா...? உங்கள் தந்தை என்ன இறைத்தூதரா, இயேசு நாதரா, கிருஷ்ண பரமாத்மாவா..." என சீறினார்.
வருண் ஐபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
தொடர்ந்து பேசிய சீமான்,"வருண் என்ற போலீஸ் அதிகாரியை நியமித்துள்ளீர்கள். அவருக்கு பல்வேறு சமூகங்கள் மீது பிறப்பு வெறுப்பு உள்ளது. வேறு ஊரில் நடந்த வழக்கை சென்னைக்கு மாற்றி, சாட்டை துரைமுருகனை குண்டாஸில் போட்டதும் இதே வருண் ஐபிஎஸ்தான். தற்போது குற்றலாத்தில் கைது செய்து திருச்சி கொண்டு வருவதும் இதே வருண் ஐபிஎஸ்தான்.
உதயநிதி கூடவே இருக்கும் ரத்தீஸ் என்பவர்தான் போலீஸ் அதிகாரிகளுக்கான பணியிடை மாற்றம், பணி உயர்வை வழங்குகிறார். அவருக்கு நெருக்கமாக இருப்பதால் எங்களை அடிக்கடி கைது செய்கிறார். பல்வேறு சமூகங்கள் மீது வன்மத்துடன் வருண் ஐபிஎஸ் உள்ளார், அதற்கான ஆதாரங்களை தருகிறேன். பேசுவதற்கெல்லாம் கைது என்றால் என்னை கைது செய்யுங்கள்... பேசினால் கைது செய்வீர்களா..." என தன்னை கைது செய்யும்படி தொடர்ந்து கூறினார். மேலும் இப்படி கைது செய்யக்கூறி கெஞ்சுபவரை எங்கையாவது பார்த்திருப்பீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
விக்கிரவாண்டியில் வாக்குப் பணம்!
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீதும், கொலை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது. 31 நாள்களில் 130க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது, அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தெருவுக்கு ஒரு அமைச்சர் பொறுப்பேற்று வாக்காளர்களுக்கு பணம் ,பரிசு பொருட்களை கொடுத்து இருக்கின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல சாதனைகளை செய்திருப்பதாக கூறும் திமுக சாதனைகளை சொல்லி வாக்கு கேட்காமல் எதற்காக வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்களை கொடுத்தது. தொழிலதிபர் அதானி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்ததாக வெளியாகி உள்ள தகவலுக்கு பதிலளித்த சீமான், "நான் இருக்கும் வரையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அனுமதிக்க மாட்டேன்" என்றார்.
மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ