விநாயகருக்கு உகந்த நாளில் தவெக கொடியை அறிமுகம் செய்யும் விஜய்..! முழு விவரம்

Vijay to Launch Tamilaga Vetri Kalagam Flag : நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்த இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கின்றன.

Last Updated : Aug 22, 2024, 07:56 AM IST
  • தவெக கொடியை அறிமுகம் செய்யும் விஜய்
  • விநாயகருக்கு உகந்த நாளில் கொடி அறிமுகம்
  • சங்கடங்களை தவிர்க்க விஜய் எடுத்த முடிவு
விநாயகருக்கு உகந்த நாளில் தவெக கொடியை அறிமுகம் செய்யும் விஜய்..! முழு விவரம் title=

Vijay to Launch Tamilaga Vetri Kalagam Flag : நடிகர் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துவிட்டார். பிப்ரவரி மாதம் 2 ம் தேதி அறிவித்த தமிழக வெற்றிக் கழகம் என தன்னுடைய கட்சி பெயரை அறிவித்த அவர், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அதற்காக தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் 8வது அவென்யுவில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் தன் கையால் 33 அடி உயர கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்ய உள்ளார். 

தவெக கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்யும் நேரம் : ஏன்?

ஆகஸ்ட் 22, வியாழக்கிழமையான இன்று கட்சி தவெக கட்சி கொடி அறிமுகம் செய்ய விஜய் தேர்வு செய்ததற்கு பின்னணியில் சில காரணங்கள் இருக்கிறது. இன்று சங்கடஹர சதுர்த்தி. நல்ல நேரம் காலை 10.45 முதல் 11.45 வரை. முழுமுதற் கடவுளான விநாயக பெருமானுக்கு உகந்த நாள். மேலும், சுப முகூர்த்தம் மற்றும் வாஸ்து நாளும்கூட. அதனால், இந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்ற இருக்கிறார். இந்த நாளில் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் வெற்றியை கொடுக்கும். அதுவும் அரசியல் சங்கடங்கள் பல வரும் என்பதால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக இந்த நாளில் விஜய் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார். 

மேலும் படிக்க | வெளியானது தவெக கட்சியின் ஒரிஜினல் கொடி...? விஜயே வந்து ஒத்திகை பார்த்த சம்பவம்!

விஜய் போட்டிருக்கும் கண்டிஷன்கள்

இந்த கொடி அறிமுக விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள 8 அணிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விஜய் கட்சிக் கொடி ஏற்றும்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்க்க வசதியாக LED டிவி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் வந்துள்ளனர். கொடி அறிமுக விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலையில் டிஃபன், மதியம் சைவ உணவும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விழாவில் கலந்து கொள்ள பல்வேறு கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளன. தவெக கொடி அறிமுக விழாவில் கலந்து கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கும் புஸ்ஸி ஆனந்த், தொலைக்காட்சிகள் காலை 7 மணிக்கு உள்ளாக பனையூர் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், யூடியூபர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக நிர்வாகிகளும் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இதுதான் கொடியா? வேறு இருக்கா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News