நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்!!
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான்,சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபாளம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மற்ற விமானப் பயணிகளிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். ஆனாலும், மக்களிடையே இந்த வைரஷின் பயம் மேலும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்.... “தமிழகத்தில் மொத்தம் 60 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து உள்ளோம். அதில், 59 பேருக்கு கொரொனா பாதிப்பு இல்லை. ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது என முடிவுகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட நபர் உடன் தொடர்பிலிருந்த 27 பேர் இது வரை பொது சுகாதாரத்துறையால் கண்டறியப்பட்டுள்ளனர். அவருடன் ஓமனிலிருந்து விமானத்தில் வந்தவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Health Secretary Beela Rajesh: We are fully prepared. We have procedures to contain this disease. We have 1086 patients under home surveillance. #coronavirus https://t.co/yR7iARwd0O pic.twitter.com/zhcmM2H6gk
— ANI (@ANI) March 8, 2020
TN-ல் கிங் நிறுவனம் தவிர தேனியில் ஒரு புதிய ஆய்வகம் அமைக்கவுள்ளோம். அதில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனையை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட நபர் உட்பட இரண்டு பேர் சென்னையில் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், வெயில் அதிகமாக இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்று சமூக வலைதளங்களில் அதிகம் செய்திகள் பரவி வரும் நிலையில், இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல் இல்லை என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் என்ற கொடிய நாவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 100,000-யை தாண்டியுள்ளது என்று சனிக்கிழமை (மார்ச்-7) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, சீனாவில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நாவலின் கொடிய வெடிப்பு நாட்டின் பெரும்பகுதியை நிறுத்திய பின்னர் சீன ஏற்றுமதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.