டி.டி.வி.தினகரன் ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இறுதி வாதம் நாளை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி கேட்ட கேள்விக்கு டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் பதிலளித்தார்.
நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நடைபெற்ற விவாதம் பற்றி பார்ப்போம்.
எதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தீர்கள்? மேலும் கவர்னரிடம் மனு கொடுத்தது சரியா? தவறா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பேசிய டிடிவி தரப்பு வக்கீல் பி.எஸ்.ராமன், எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் புகார் இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தோம். கவர்னரிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் கொடுத்தோம்.
பின்னர் நீதிபதி அவர்கள் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு யாரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அதிமுக கட்சியின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறி கவர்னரிடம் மனு கொடுத்தோம் என டிடிவி தரப்பு வக்கீல் பி.எஸ்.ராமன் கூறினார்.
இறுதி வாதம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.