தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியையொட்டி இந்தியப் பெருங்கடலில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இது முதலில் இலங்கை அருகே நீடித்து வந்தது. தற்போது தமிழகத்தின் தென்முனையில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுத்தவரை மிதமான மழை இருக்கலாம். அதேபோல கடலோர மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் வானிலை இப்படி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்த வரை மிதமான மழை பெய்யலாம். அப்படி இல்லாதபட்சத்தில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் குறைந்தபட்சம் 23 டிகிரி வரை செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.