Nokia நிறுவனத்தின் Nokia 6.1 Plus விரைவில் வெளியாகவுள்ள நிலையில் Nokia 6.1 மொபைலின் விலை குறைந்துள்ளது!
பிரபல மொபைல் நிறுவனமான Nokia வரும் ஆகஸ்ட் 21-ஆம் நாள் தனது புதுரக போன்களை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது, குறிப்பாக பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள Nokia 6.1 Plus இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட Nokia 6.1-ன் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது.
Nokia 6.1 அறிமுகத்தின் போது.... 3GB variant - Rs 16,999-க்கும், 4GB variant - Rs 18,999-க்கும் வெளியிடப்பட்டது. தற்போது இந்தியாவில் Nokia 6.1 Plus வெளியாகவுள்ள நிலையில் Nokia 6.1 3GB variant - Rs 15,499-க்கும், 4GB variant - Rs 17,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழைய விலையினை விட Rs.1500 தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Nokia 6.1 சிறப்பம்சங்கள்...
- 5.5" முழு HD திரை
- Snapdragon 630 chipset
- 4GB RAM, 64GB உள் நினைவகம்.
- Android 8.0 Oreo இயக்கமுறை
- 3000mAh மின்களன்
- LED flash-உடன் கூடிய 16MP பின் கேமிரா, 8MP முன் கேமிரா.
- 4G, VoLTE, Wi-Fi, Bluetooth, GPS என கூடுதல் அம்சங்களுடன் Nokia 6.1 வெளியாகிறது.