பெங்களூரு மெட்ரோ 2வது கட்ட மின்மயமாக்கல் பணி ஆல்ஸ்டோம் நிறுவனம் கைப்பற்றியது

பெங்களூரு நகரின் 2வது கட்ட மெட்ரோ சேவையின் மின்மயமாக்கல் பணி ஆல்ஸ்டோம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2019, 06:49 PM IST
பெங்களூரு மெட்ரோ 2வது கட்ட மின்மயமாக்கல் பணி ஆல்ஸ்டோம் நிறுவனம் கைப்பற்றியது title=

பெங்களூரு நகரின் 2வது கட்ட மெட்ரோ சேவையின் மின்மயமாக்கல் மற்றும் மின்சார பணிகளை மேற்கொள்ள ஆல்ஸ்டோம்(alstom) நிறுவனம் காண்டிராக்டெக்ட்டை கைப்பற்றியுள்ளது. இந்த காண்டிராக்டெக்ட்டை பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) வழங்கியது. பெங்களூரு நகரின் 2வது கட்ட மெட்ரோ சேவை 33 கிலோமீட்டர் தூரம் கொண்டது.

ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் மின்மயமாக்கல் பணி இந்தியாவின் மூன்றாவது பெரியது. இது சுமார் ரூ.580 கோடி திட்டம் ஆகும். பெங்களூரு நகரின் 2வது கட்ட மெட்ரோ சேவை மூலம் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு இணைக்கப்படும். இதன்மூலம் சாலைகளில் ஏற்ப்படும் போக்குவரத்து நேரிச்சல் சீராக மாறும்.

Alstom நிறுவனம் பழைய தொழில்நுட்பத்துடன் சேர்த்து புதிய மின்சக்தி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கட்டமைப்பை மேற்கொள்ளும். இந்த திட்டம் ஐந்து கட்டங்களில் நிறைவு செய்யப்படும். முதல் கட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 6.5 கிமீ தூரம் மெட்ரோ பணியில், இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

Trending News