அந்தமானுக்கு கடலுக்கு அடியில் செல்லும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பு… !!!

அந்தமான் நிக்கோர்பர் தீவுகளுக்கான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ம் தேதி தொடக்கி வைக்கிறார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2020, 07:49 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்திற்கான அடிக்கலை 2018 டிசம்பர் 30ம் தேதி போர்ட் ப்ளேயரில் நாட்டினார்
  • 1224 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் மூலம் அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்கலாம்
அந்தமானுக்கு  கடலுக்கு  அடியில் செல்லும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பு… !!! title=

பிரதமர் நரேந்திர மோடி,சென்னையையும் போர்ட் ப்ளேயரையும் இணைக்கும் 2300 கிலோ மீட்டர் நீளமுள்ள அப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் தொடக்கி வைக்கிறார்.

இதன் மூலம் அந்தமான் நிக்கோபர் தீவுகளுகான இணைய தொடர்பு வலுவடையும்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்திற்கான அடிக்கலை 2018  டிசம்பர் 30ம் தேதி போர்ட் ப்ளேயரில் நாட்டினார். 1224 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ | உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்யும் ரஷ்யா…!!!                   

இந்த திட்டத்திற்கு தகவல் தொடர்பு அமைச்சின் தொலைத் தொடர்புத் துறையின் கீழ் உள்ள யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் இந்திய அரசு நிதியளித்தது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்த திட்டத்தை நிறைவேற்றியது. இந்த திட்டத்திற்கு தொலைத்தொடர்பு  துறை ஆலோசகர்களாக இருந்தது டெலி கம்யூனிகேஷன்ஸ் கன்சல்டண்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) ஆகும்.

ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..

இந்த திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள மக்கள் செலுத்து இணைய இணைப்பிற்கு பில்களும் கணிசமாகக் குறையும். தற்போது, தீவுகளில் வசிப்பவர்கள் இணைய இணைப்புக்காக அதிக கட்டணம் கொடுக்கின்றனர்.

ஆப்டிகல் ஃபைபர் இணைப்பின் மூலம் போர்ட் பிளேருடன், ஸ்வராஜ் ட்வீப் (ஹேவ்லாக்), லிட்டில் அந்தமான், கார் நிக்கோபார், கமோர்டா, கிரேட் நிக்கோபார், லாங் ஐலேண்ட் மற்றும் ரங்காட்  ஆகிய பகுதிகளும் இணைக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்கலாம்.

Trending News