செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!

Know Your Dog Language : இப்போது மனிதர்கள் நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும், அற்புதமான மென்பொருளை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியது செயற்கை நுண்ணறிவு தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 21, 2024, 06:58 PM IST
  • நாயின் குரைப்பு மொழியை புரிய வைக்கும் மென்பொருள்!
  • விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!
  • நாயின் மனதில் என்ன இருக்கிறது?
செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே! title=

மனிதர்களால் நாய்களின் மொழியையும் புரிந்துக் கொள்ளமுடியும்... நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ளக்கூடிய மென்பொருளை உருவாக்கிய விஞ்ஞானிகள், நன்றியுள்ள நண்பனின் மனதையும் புரிந்துக் கொள்ள முடியும் என்று சொல்கின்றனர். இது எப்போது சாத்தியமாகும்?

வீட்டில் வளர்க்கும் நாயோ அல்லது சாலையில் சுற்றித் திரியும் நாயோ, எதுவாக இருந்தாலும், அவை என்ன சொல்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் நாமே யூகித்துக் கொள்வோம். நீங்கள் செல்லமாக வளர்க்கும் உங்கள் நாய் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும் தோராயமாகத் தான் புரிந்துக் கொள்ள முடியும். உண்மையில், நாய் மொழியை புரிந்துக் கொள்வது சாத்தியமாகும் என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 

இது பற்றி யோசிக்காவிட்டாலும், இனிமேல் உங்கள் நாய் நினைப்பதை, குரைப்பால் சொல்வதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். நம்ப முடியவில்லையா? பரவாயில்லை, இன்னும் சில நாட்களில் அந்த சாதனம் விலைக்கு வந்தால் வாங்கி பரிசோதித்துப் பார்த்துக் கொள்வோம்.நாய்கள் குரைக்கும் சத்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் மென்பொருளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!

AI தொழில்நுட்பம் நாய் குரைப்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை சாத்தியமாக்கிய அற்புதமான தொழில்நுட்பம் நாய் குரைக்கும் சத்தத்தைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, குரைக்கும் நாயின் பாலினம், இனம், ஏன் வயதைக் கூட மதிப்பிட உதவும்.  நாயின் குரைப்பின் வெவ்வேறு அதிர்வெண்கள், தீவிரம் மற்றும் ஒலி வடிவங்களை பகுப்பாய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு நினைத்து பார்க்க முடியாத விஷயங்களையும் சாத்தியமாக்குகிறது. 

இந்த மென்பொருள் எப்படி வேலை செய்கிறது?

நாய் குரைக்கும் சத்தத்தை பதிவு செய்யும் இந்த மென்பொருள்  அதை டிஜிட்டல் சிக்னலாக மாற்றுகிறது. டிஜிட்டல் சிக்னலாக மாறிய குரைப்புச் சத்தம், தரவுத்தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் அதுதொடர்பான தரவுகளுடன் ஒப்பிடப்படும்.

ஆயிரக்கணக்கான நாய் குரைக்கும் ஒலிகளை பதிவு செய்து அதற்கான விவரங்கள், தரவுகள் என அனைத்தும் பதிவேற்றப்பட்டிருக்கும். பயிற்சியளிக்கப்பட்ட AI மாதிரியில் இருந்து கிடைக்கும் தரவுகளுடன், டிஜிட்டல் சிக்னல் ஒப்பிடப்பட்டு, தகவல்கள் கொடுக்கப்படுகிறது. 

இந்த தொழில்நுட்பத்தின் நன்மைகள்

மருத்துவ சிகிச்சை
கால்நடை மருத்துவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். நாய்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிய உதவும். உதாரணமாக, ஒரு நாய் நோய்வாய்ப்பட்டிருந்தால், அதன் குரைக்கும் ஒலி, வழக்கமான குரைப்பில் இருந்து வேறுபட்டிருக்கலாம். இந்த நுட்பம் பல்வேறு மைல்கல்களை அடைய உதவியாக இருக்கும்.

நாய் வளர்ப்பவர்களுக்கு பயன்
நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அவர்களின் நாய் என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும் அதன் தேவைகள் என்ன என்பதை புரிந்துக் கொள்ளலாம். நாய்களின் மனதில் இருப்பதை புரிந்துக் கொள்ளாமல் நாமே தவறாக முடிவெடுப்பதை தவிர்க்க இந்த நுட்பம் உதவும். 

ஆராய்ச்சியில் உதவி
இந்த தொழில்நுட்பம் நாய் நடத்தை மற்றும் தகவல் தொடர்பு பற்றி ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தப்படலாம்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரஜினி பட இயக்குநரின் மனைவிக்கு தொடர்பு...? - பரபரப்பு தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News