உலகின் அதிக மைலேஜ் தரும் கார், வெளியான முக்கிய தகவல்

1 கிலோ எரிபொருளில் சுமார் 260KM மைலேஜ் தரும் காரைப் பற்றி இன்று நாம் இங்கே காண உள்ளோம்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 26, 2021, 07:34 AM IST
உலகின் அதிக மைலேஜ் தரும் கார், வெளியான முக்கிய தகவல்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாற்று எரிபொருட்கள் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் விரைவாக மின்சார வாகனங்களை (EV) நோக்கி நகர்கின்றன, அதே நேரத்தில் ஜப்பான் போன்ற சில நாடுகள் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

ஒரு கிலோவுக்கு 260 KM மைலேஜ்
டொயோட்டாவின் மிராய் (Toyota Mirai) கார் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி, மிக நீண்ட தூரம் பயணித்த வாகனம் என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) செய்துள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் டொயோட்டாவின் மிராய் தெற்கு கலிபோர்னியாவில் மேற்கொண்ட இந்த சாதனை அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தப் பயணத்தின் ஒரே ஒரு முறை, ஐந்து நிமிடம் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட்டு, மொத்தம் 1360 கிலோமீட்டர்களைக் கடந்து மிராய் சாதனை படைத்தது.

Also Read | சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!

ஹைப்பர்மில்லர், வெய்ன் ஜெர்டெஸ் மற்றும் இணை பைலட் பாப் விங்கர் தலைமையில் கார் இவ்வளவு தூரத்தை கடந்துள்ளது. இந்த முழு பயணத்தையும் கின்னஸ் உலக சாதனைகள் குழுவும் கண்காணித்தது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்த கார், ஒரே ஐந்து நிமிட சார்ஜில் 1360 கிமீ தூரத்தை கடந்து அனைவரையும் திகைக்க வைத்தது. இந்த தூரத்தைக் கடக்க இரண்டு முழு நாட்கள் ஆனது என்ற தகவலை டொயோட்டா நிறுவனம், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.

இந்த கார் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
நிறுவனத்தின் படி, டொயோட்டா மிராய் (Toyota Mirai) 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிறுவனத்தின் முதல் எரிபொருள் செல் மின்சார வாகனம் அதாவது ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கார். இந்த கார் வட அமெரிக்காவில் சில்லறை விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை ஹைட்ரஜன் எரிபொருள் ஒரு விருப்பமாக பார்க்கப்படவில்லை.

இந்தியாவில் ஹைட்ரஜன் எப்போது உற்பத்தி செய்யப்படுகிறது?
உண்மையில், ஹைட்ரஜன் உற்பத்தி மிகவும் விலை உயர்ந்தது. இந்த பணவீக்கம் காரணமாக, இது சரியான தேர்வாக பார்க்கப்படவில்லை. ஆனால் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹைட்ரஜன் உற்பத்திக்கான செலவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை பெட்ரோலிய நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, அடுத்த பத்தாண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு ஒரு டாலர் என்ற அளவில் வரலாம் என்று ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

Also Read | Mahindra XUV 700 கசிந்த தகவல்கள்: அனைத்து பெட்ரோல், டீசல் வகைகளின் ஒப்பீடு இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News