BSNL புதிய சலுகை அறிவிப்பு, ரூ. 45 விலையில் இத்தனை நன்மைகள்

BSNL நிறுவனம் ரூ. 45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் சலுகையை அறிவித்து உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2021, 01:42 PM IST
BSNL புதிய சலுகை அறிவிப்பு, ரூ. 45 விலையில் இத்தனை நன்மைகள் title=

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் BSNL நிறுவனம் 45 ரூபாய் விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டமானது விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இதில் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 இலவச எஸ்எம்எஸ்க்கள் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 45 நாட்களுக்கு பொருந்தும். 

இந்த புதிய திட்டம் எஃப்.ஆர்.சி விளம்பர திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பிட்ட 45 நாட்கள் கழித்து, பிஎஸ்என்எல் (BSNL) பயனர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேறு எந்த திட்டத்திற்கும் மாறலாம்.

ALSO READ | BSNL அட்டகாச ரீசார்ஜ் திட்டம்: ஜியோ, ஏர்டெல்லுக்கு கடுமையான போட்டி

இத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 249 விலையில் மற்றொரு புதிய பிரீபெயிட் சலுகையை (Prepaid Plans) அறிவித்து இருக்கிறது. இதன் வேலிடிட்டி நாட்கள் 60 ஆகும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

45 நாட்கள் வேலிடிட்டி நிறைவுற்றதும், பயனர்கள் தற்போது வழங்கப்படும் இதர சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். புதிய சலுகை ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் BSNL நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் குறித்த தகவல்களை நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் பகிர்ந்துள்ளது.

ALSO READ | BSNL Free 4G SIM: யாருக்கு கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News