‘பி.எஸ்.என்.எல்’ புதிய சலுகை அறிவிப்பு - பார்க்க!!

Last Updated : Sep 20, 2017, 06:48 PM IST
‘பி.எஸ்.என்.எல்’ புதிய சலுகை அறிவிப்பு - பார்க்க!! title=

தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இதற்கான அறிவிப்பு பிஎஸ்என்எல் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும்.

சலுகை விவரம்:-

பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.249-க்கு ரீசார்ச் செய்தால் 28 நாட்களுக்கு அனைத்து வகையான வாய்ஸ் கால்கள்(லோக்கல், எஸ்.டி.டி.) அன்லிமிட்டெட் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகை வரும் 25-ம் தேதி வரை மட்டுமே. ஆனால் இந்த சலுகை பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News