இனி நாட்டின் வெள்ள அபாய எச்சரிக்கைகளை முன்னரே அறிந்து மக்களுக்கு நொடியில் அறிவிக்கும் கூகுள்!
மத்திய நீர்வள ஆணையமும், கூகுளும் இணைந்து நாட்டில் ஏற்படும் வெள்ள அபாய எச்சரிக்கைகளை முன்னரே அறிவிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மத்திய நீர்வள ஆணையம் நாட்டில் ஏற்படும் வெள்ளம் உட்பட பல பேரிடர்கள் மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளை நிறுத்துவதற்க்காக வெள்ள அபாயத்தை முன்னரே தெரிவிக்கும் வகையிலான தொழிற்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது.
இந்த சோதனைகளில் தொழிநுட்பம் சார்ந்த கருவிகள் மற்றும் உலக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கிய பல்வேறு தொழில்நுட்பங்களான வெள்ள மேலாண்மைக்கு பயன்டுத்தகூடிய செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் மேப்பிங் போன்றவற்றை கொண்டுவருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் வெள்ள முகாமைத்துவத்தை காட்சிப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் ஆராய்ச்சி திட்டத்தில் கூகிள் எர்த் பயன்படுகிறது. இதனால், நாட்டில் ஏற்படும் வெள்ள அபாயங்களை முன்னரே கண்டறிந்து வெளியிட கூகுள் நிறுவனத்துடன் ஏறப்டுபட்டுள்ள இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி, இந்த வருடத்தில் சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்படவிருக்கிறது.
இனி பின் வரும் வருடங்களில் நடைமுறையாக செயல்முறைபடுத்தப்படும் எனவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.