இந்த வாகனங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி; முந்துங்கள் மக்களே

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் அடுத்த தலைமுறை மாடல் விரைவில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 20, 2022, 01:53 PM IST
  • மஹிந்திரா ஸ்கார்பியோவில் தள்ளுபடி
  • எஸ்யூவி வாங்கினால் ரூ.19,000 வரை தள்ளுபடி
  • ரூ.11,500 கார்ப்பரேட் தள்ளுபடி
இந்த வாகனங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி; முந்துங்கள் மக்களே title=

நாட்டின் முன்னணி எஸ்யூவி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா தனது வாகன வரிசையை மேம்படுத்தி, ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறை மாடலை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில், நிறுவனம் அதன் சில டீஸர் வீடியோக்களையும் வெளியிட்டது. அதன்படி இந்த எஸ்யூவி சந்தைக்கு வருவதற்கு முன்பு, மே மாதத்தில் தற்போதைய மாடலில் பெரிய தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகிறது.

மிண்ட் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ முதல் பொலேரோ வரையிலான வாகனங்களை வாங்குவதில் நீங்கள் பெரும் தொகையைச் சேமிக்கலாம். இந்த சலுகையில் பண தள்ளுபடி, பரிமாற்ற போனஸ், பாகங்கள் போன்ற பல்வேறு தள்ளுபடிகள் அடங்கும். எனவே எந்தெந்த வாகனத்தில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ஹூண்டாய் கார் வாங்க இதுவே சரியான நேரம்; அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

மஹிந்திரா ஸ்கார்பியோ: ஸ்கார்பியோவின் எஸ்3+ மற்றும் எஸ்5 வகைகளில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் பண தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். எஸ்3+ இல் ரூ.5,000 மற்றும் எஸ்5 இல் ரூ.15,000 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீகள் இந்த இரண்டு ஸ்கார்பியோ மாடல்களுக்கும் கிடைக்கின்றன. இந்த எஸ்யூவியை வாங்கும்போது ரூ.10,000 வரை ரொக்கத் தள்ளுபடியையும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். இது தவிர, கார்ப்பரேட் தள்ளுபடியாக 4,000 ரூபாய் நன்மையும் கிடைக்கும்.

மஹிந்திரா பொலேரோ: இந்த எஸ்யூவி நாட்டின் கிராமப்புறங்களில் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த எஸ்யூவி வாங்கினால் ரூ.19,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொலிரோ எஸ்யூவியை ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியுடன் பெறலாம். 

மஹிந்திரா அல்டுராஸ்: மஹிந்திராவின் பிரீமியம் எஸ்யூவி அல்டுராஸ் வாங்கும்போது சிறந்த தள்ளுபடியை நீங்கள் பெறலாம். இந்த எஸ்யூவியில் ரூ.2.20 லட்சம் வரை ரொக்க தள்ளுபடியும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.11,500 கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த எஸ்யூவியில் ரூ.20,000 வரையிலான ஆக்சஸெரீகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? இந்த மாதம் வாங்கினால் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News