Barroz Movie Pre Release Event :
Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்", திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான மோகன்லால் பேசியதாவது…
47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.
ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். 2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிடிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது.
மேலும் படிக்க | மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்த மார்கோ!
படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு. பாலா, அவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நன்றி. ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய ரொமான்டிக் மலையாள படங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ