Infinix Smart 6 Plus: சிறந்த பேட்டரி - குறைவான விலை! வரவேற்கும் வாடிக்கையாளர்கள்

இன்பினிக்ஸ் நிறுவனம் தங்களுடைய புதிய ஸ்மார்ட் 6 பிளஸ் போனை குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2022, 06:14 PM IST
  • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்
  • குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகம்
  • பேட்டரி மற்றும் டிஸ்பிளே வாடிக்கையாளர்களை கவர்கிறது
Infinix Smart 6 Plus: சிறந்த பேட்டரி - குறைவான விலை! வரவேற்கும் வாடிக்கையாளர்கள் title=

Infinix Smart 6 Plus; இன்பினிக்ஸ் நிறுவனம் தங்களுடைய புதிய ஸ்மார்ட் 6 பிளஸ் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் MediaTek Helio G25 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 3ஜிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை அனுமதிக்கும். ரேம் அளவையும் அதிகப்படுத்திக் கொள்ளும் ஆப்சன் இந்த போனில் இருக்கிறது. குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போன், சூப்பரான பேட்டரி மற்றும் டிஸ்பிளேவுக்காக வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கேமரா அமைப்பு 

Infinix Smart 6 Plus ஸ்மாரட்போன் 8MP முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. AI டெப்த் சென்சார் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 எம்பி முன்பக்க சென்சார் கேமரா இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்த டிவிக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்! ரூ.600 வாங்க அட்டகாசமான வாய்ப்பு

ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ்

Infinix Smart 6 Plus ஸ்மார்ட்போன் 64GB உள்ளடங்கிய ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதை microSD கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்க முடியும். ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ-USB போர்ட் ஆகியவை அடங்கும். இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸில் உள்ள சென்சார்களில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி இருக்கும். பிரத்யேக கைரேகை சென்சார் மற்றும் பாதுகாப்புக்காக ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது. 

Infinix Smart 6 Plus: விலை

இந்தியாவில் Infinix Smart 6 Plus-ன் விலை ரூ.7,999 ஆகும். இது ஆரம்ப விலை. ஸ்மார்ட்போனின் விற்பனை Flipkart-ல் ஆகஸ்ட் 3 முதல் தொடங்குகிறது. 
Crystal Violet, Tranquil Sea Blue மற்றும் Miracle Black ஆகிய கலர் விருப்பங்களில் கிடைக்கும். பட்ஜெட் மிகவும் குறைவாக இருக்கும். அதேநேரத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் எல்லாம் இந்த போனில் இருக்கிறது. திரைப்படங்களை பார்க்கவும், கேமிங் விளையாடுவதும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். 

மேலும் படிக்க | போன் தொலைந்துவிட்டால் GPay, PhonePe மற்றும் Paytm -ஐ பிளாக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News