புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், PSLV C-48 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது!!
பாகிஸ்தானின் ஒவ்வொரு பாவத்துக்கும் கணக்கு தீர்ப்பதற்கு இந்தியாவின் பாகுபலி தயாராக உள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு பயங்கரவாத சதியையும் இந்தியா இப்போது வானத்திலிருந்து தரையில் முறியடிக்கும். எதிரிகளின் ஒவ்வொரு செயலையும் விண்வெளியில் இருந்து கண்டுபிடிப்பதில் புகழ்பெற்ற இந்தியா, பயங்கரவாதிகளுக்கு பீதியைத் தூண்டும் மற்றொரு வேலையைச் செய்யப் போகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் ராணுவமும் எதிரிகளுக்கு எதிராக ஒரு எக்ஸ்ரே திட்டத்தை தயார் செய்துள்ளன.
இந்தியாவின் ஆபரேஷன் 'திரிநேத்ரா' , பாகிஸ்தானின் காலத்தை முடிவு செய்யும் எமனின் பாசக்கயிறாக விளங்கப்போகிறது. இந்தியாவின் நல்லிணக்கத்தை குலைக்க நினைத்தால் பாகிஸ்தான் ராணுவதளபதி பாஜ்வாவும், பிரதமர் இம்ரானும் மிகப் பெரிய விலையைத் தரவேண்டியிருக்கும். ஏனென்றால் இந்தியாவின் 'திரிநேத்ரா' பாகிஸ்தானின் செயல்களை கண்காணிப்பதற்காக வானத்தை தன்வசப்படுத்தப் போகிறது. அதற்காக இஸ்ரோ இன்று ஒரு இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. அதன் பெயர் ரீசாட் -2 பிஆர் 1 (RiSAT-2BR1).
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இஸ்ரோ இதனை ஏவுகிறது. இதில் ரிசாட் -2 பிஆர் 1 உடன் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 9 செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் 6 மற்றும் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் தலா 1 செயற்கைக்கோளும் உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பி.எஸ்.எல்.வி-சி 48 என்ற சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு ஏவப்படும். இந்த ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 21 நிமிடங்களுக்குப் பிறகு, இஸ்ரோ அனைத்து 10 செயற்கைக்கோள்களையும் அவற்றின் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வைக்கும். இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 576 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும்.
முன்னதாக, 2009-இல் ரிசாட்-2, 2012-இல் ரிசாட்-1 ஆகிய செயற்கைக்கோள்களையும், கடந்த மே 22-ஆம் தேதி ரிசாட்-2பி செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் தொடா்ச்சியாக, கூடுதல் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காக ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தற்போது ஏவுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் செலுத்தப்படும் ராக்கெட்டை மக்கள் பார்த்து ரசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இதற்காக விண்வெளி மையத்தில் பார்வையாளர்களுக்காக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 5000 பேர் ஒன்றாக அமர்ந்து விண்ணில் ராக்கெட் கிளம்பிச் செல்லும் காட்சியை ரசிக்க முடியும்.
விண்வெளியில் இந்தியா எப்படியொரு சிறப்பான வரலாற்றை உருவாக்கப் போகிறது என்பது புரிந்திருக்கும். இந்த ரீசாட் -2 பிஆர் 1( RiSAT-2BR1) செயற்கைக்கோள் பாகிஸ்தானுக்கு மிக மோசமான சேதியை தெரியப்படுத்தப் போகிறது. ரிசாட் -2 பிஆர் 1 செயற்கைக்கோள் பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், இந்தியாவின் வலிமை இன்னும் பன்மடங்காக அதிகரிக்கும். இது இந்தியாவின் ரேடார் இமேஜிங் திறனை மேம்பட்டதாக்கும். எல்லையை விரிவடைய வைக்கும். இந்திய எல்லைகளை கண்காணித்து அவற்றை அசைக்க முடியாததாக பாதுகாக்கும்... ரீசாட் 2 பிஆர் ஒன்றின் மூலம், நம் கடல் எல்லைகளை கண்காணிப்பது மிகவும் துல்லியதாக இருக்கும் .. மும்பை தாக்குல் போன்ற பயங்கரவாத சம்பவங்களை இனி பாகிஸ்தான் அரங்கேற்ற முடியாது. இந்த செயற்கைக்கோள், எல்லா நேரங்களிலும் தெளிவான படங்களை எடுக்கும் ஆற்றல் படைத்தது. இரவில் இருட்டாக இருக்கிறது என்று நினைத்து யாரும் ஊடுருவ வழியில்லை.
இது சுமார் 100 கி.மீ பரப்பளவுக்கு உட்பட்ட படங்களை அனுப்பும் என்பதால் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவலை உன்னிப்பாகக் கண்காணிக்கலாம். ரிசாட் -2 பிஆர் 1 இரவும் பகலும் வேலை செய்யும். இது மைக்ரோவேவ் அதிர்வெண்ணில் இயங்குவதால் இந்த செயற்கைக்கோளை ராடார் இமேஜிங் சேட்டிலைட் என்று அழைக்கின்றனர்.
ரிசாட் -2 பிஆர் 1 இரவும் பகலும் வேலை செய்யும். இது மைக்ரோவேவ் அதிர்வெண்ணில் இயங்குவதால் இந்த செயற்கைக்கோளை ராடார் இமேஜிங் சேட்டிலைட் என்று அழைக்கின்றனர். ரிசாட் -2 பிஆர் 1 எந்த வானிலையிலும் வேலை செய்ய முடியும். மேகங்களுக்கு அப்பால் கூட படங்களை எடுக்க முடியும். ஆனால் இந்த படங்கள் கேமராவிலிருந்து வருவதைப் போலவே இருக்காது. விவசாயம் தவிர வனம், கூடுதல் ராணுவப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளுக்கும் இது பயன்படும்.
ரிசாட் -2 பிஆர் 1 என்பது ஒரு செயற்கைக்கோள் மட்டுமல்ல. பாகிஸ்தானையும் அதன் பயங்கரவாத முகாம்களையும் உன்னிப்பாக கண்காணிக்கப் போகும் இந்தியாவின் மூன்றாவது கண்.
'மிஷன் இந்தியா'வின் மிக சக்திவாய்ந்த கண்ணாக விளங்கும். எல்லைகள் மீது எப்போதும் விழிப்போடு இருக்கும். தப்பித்தவறி எதிரிகளோ பயங்கரவாதிகளோ நம் மண்ணில் காலடி வைக்க முற்பட்டால் அதன் வீரியமான பார்வை பட்டு, நம் ராணுவத்தினர் அவர்களை பொசுக்கிவிடுவது நிச்சயம்.