ஜியோ அசத்தல்! Disney + Hotstar, Sony Liv, ZEE5 உட்பட 15 ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்கலாம்

OTT Benefits: டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்க விரும்பினால், ஜியோ ஃபைபரின் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2022, 04:54 PM IST
  • கொரோனா காலத்தில் ஓடிடி தளங்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
  • டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5 இலவசமாக பார்க்கலாம்.
  • பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் வரம்பற்ற டேட்டா.
ஜியோ அசத்தல்! Disney + Hotstar, Sony Liv, ZEE5 உட்பட 15 ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்கலாம் title=

Jio Fiber Plans: கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில், யாரும் வெளியே செல்ல முடியாதா நிலை இருந்ததால், அனைவருக்கும் ஓடிடி தளங்கள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. திரையரங்குகளுக்கு செல்ல முடியாததால் அனைவரும் ஓடிடி தளங்கள் தளங்களில் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் பார்த்து மகிழ்ந்தனர். வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக ஓடிடி தளங்கள் இருந்தது. நாளுக்கு நாள் ஓடிடி தளங்களுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல ஓடிடி தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு சில ஓடிடி தளங்களின் சந்தாக்கள் விலை அதிகமாக இருப்பதினால், பல பார்வையாளர்கள் வாங்குவது இல்லை. ஆனால் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் என்றால், உங்களுக்கு சில ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்கலாம். வாருங்கள், அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்துக்கொள்ளுவோம்.

மேலும் படிக்க: Flipkart Big Saving Days: வெறும் 7999 ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் வாடிக்கையாளர் என்றால், உங்களுக்காக பல ஜியோ ஃபைபர் திட்டங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ ஃபைபர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 30Mbps, 100Mbps மற்றும் 150Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலானா வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமான ஜியோ 100Mbps வேகத்தில் 3 பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. அவற்றின் விலை முறையே ரூ.899, ரூ.799 மற்றும் ரூ.699 ஆகும். இதில் முக்கியமாக, ரூ.899 மற்றும் ரூ.799 திட்டங்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்களுக்கு இலவச ஓடிடி சந்தா கிடைக்கும்.

நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்க விரும்பினால், ஜியோ ஃபைபரின் ரூ.899 திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். 

ஜியோ ஃபைபர் ரூ.899 திட்டத்தின் விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.899 ஜியோ ஃபைபர் திட்டத்தில் 100 Mbps வேகத்தில் இணையத் தரவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 100 Mbps டேட்டா அப்லோட் மற்றும் டவுன்லோட் வேகத்தை வழங்குகிறது. ஜியோ ஃபைபரின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

மேலும் படிக்க: அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இலவசமா வேணுமா... இதை பண்ணுங்க!

ஜியோ ஃபைபரின் ரூ.899 திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ் மற்றும் ஜீ5 ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. இது தவிர, VOOT Select, Voot Kids உட்பட மொத்தம் 15 ஓடிடி தளங்களுக்கான சந்தாவும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான விலை ரூ. 699 ஆகும். மேலும் கூடுதலாக 14 ஓடிடி பயன்பாடுகளுக்கு நிறுவனம் ரூ.200 வசூலிக்கிறது. ஆக மொத்தம் இந்த திட்டத்தின் விலை ரூ.899 என்பது குறிப்பிடத்தக்கது.

Jio Fiber Plans

ஜியோ ஃபைபர் ரூ. 999 திட்டதின் விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் வரம்பற்ற டேட்டா உட்பட மொத்தம் 15 ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது.

மேலும் படிக்க: Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News