Jio vs Vodafone Idea? ரூ249 ரீசார்ஜ் திட்டம், எது பெஸ்ட்

ஜியோ அல்லது வோடபோன் ஐடியா எந்த நிறுவனம் ரூ.249க்கு அதிக சலுகைகளை வழங்குகிறது என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 8, 2022, 05:32 PM IST
  • Vi இன் ரூ.249 திட்டம் 21 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
  • ஜியோவின் ரூ.249 திட்டம் 23 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
  • ஜியோவின் திட்டம் vs Vi திட்டம்.
Jio vs Vodafone Idea? ரூ249 ரீசார்ஜ் திட்டம், எது பெஸ்ட் title=

தனியார் தொலைத்தொடர்பு துறையில் மலிவான சலுகைகளை வழங்குவதில் ஜியோ நிறுவனம் அறியப்படுகிறது. அதே நேரத்தில், Vodafone Idea அதன் திட்டங்களில் பயனர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது. இன்று இந்த இரண்டு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப் போகிறோம். ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா இரண்டும் தங்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவில் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது. இதன் விலை ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் நன்மைகள் முற்றிலும் வேறுபட்டவை.

ஜியோவின் ரூ.249 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.249 திட்டத்தில், வேலிடிட்டி 23 நாட்கள் வரை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். 23 நாட்களின் படி, இந்த திட்டத்தில் மொத்தம் 46 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி தரவு ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் @64 Kbps ஆக இருக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு செக் வைத்த அரசு! இனி இஷ்டத்துக்கு போட முடியாது

வோடபோன் ஐடியாவின் ரூ 249 திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 திட்டத்தில், பயனர்களுக்கு 23 நாட்களுக்கு பதிலாக 21 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறுகிறார்கள். 21 நாட்களின் படி, இந்த திட்டத்தில் மொத்தம் 31.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் வரம்பற்ற அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

இரண்டு நிறுவனங்களின் நன்மைகளை அறிந்த பிறகு, ஜியோ நிறுவனம் Vi ஐ விட சிறந்த பலன்களை ரூ.249 விலையில் வழங்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜியோவின் திட்டத்தில் அதிக நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் உள்ள டேட்டா நன்மையும் Vi ஐ விட அதிகமாகும்.

மேலும் படிக்க | யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News