தினமும் 4 ரூபாய் செலவழித்தால் 6 ஜிபி டேட்டா, 84 நாட்கள் யூஸ் பண்ணலாம்

Jio's Rs. 395 Plan: ஜியோவின் 395 ரூபாய் திட்டத்தை நீங்கள் ரீச்சார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அத்துடன் 6 ஜிபி டேட்டாவும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2023, 03:51 PM IST
  • ஜியோ புதிய ரீச்சார்ஜ் திட்டம்
  • 6 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி
  • தினமும் 4 ரூபாய் செலவழித்தால் போதும்
தினமும் 4 ரூபாய் செலவழித்தால் 6 ஜிபி டேட்டா, 84 நாட்கள் யூஸ் பண்ணலாம் title=

Jio's Rs. 395 Plan: ஜியோ வாடிக்கையாளர்கள் நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால், 84 நாட்கள் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜியோ ரூ.395 திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அதாவது தினமும் 4 ரூபாய் செலவழித்தால் போதும். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இது ஜியோவின் மலிவான திட்டங்களில் ஒன்று.நீங்களும் ஒரு ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்து 3 மாத திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான சிறந்த திட்டமாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ 395 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.395 திட்டம் நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கானது. ஜியோவின் ரூ.395 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மொத்தம் 6ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும். உங்கள் டேட்டா திட்டத்தின் வரம்பை அடைந்த பிறகு, வேகம் 64Kbps ஆக குறையும்.

மேலும் படிக்க | 14 ஓடிடிகள் இலவசம்... ஹாட்ஸ்டார், பிரைம், SunNXT எல்லாம் இருக்கு - ஜியோவின் ஜாக்பாட் பிளான்

இந்த திட்டத்தின் பலன்கள் என்ன?

ஜியோவின் ரூ.395 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் இணைய டேட்டா, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தவிர மற்ற நன்மைகளையும் பெறுகிறார்கள். இதில், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் அணுகல் ஆகியவை கிடைக்கும். உங்கள் பகுதியில் 5G இருந்தால், இந்த திட்டத்தில் 5G சேவையையும் பெறுவீர்கள். நீண்ட காலத் திட்டத்தைத் தேடுபவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது. 

ஜியோ ஓடிடி திட்டங்கள்

இதுதவிர ஓடிடி உள்ள திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அண்மையில் அதற்கான திட்டங்களையும் ஜியோ அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ டிவி (JioTV) பிரீமியம் சந்தாவுடன் மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ டிவி பிரீமியம் மூலம், அந்நிறுவனம் ஜியோ சினிமா (JioCinema) பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ZEE5, SunNXT, சோனிலிவ், பிரைம் வீடியோ (மொபைல்), டிஸ்கவரி+ உள்ளிட்ட 14 ஓடிடி செயலிகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. புதிய திட்டங்களின் விலையை பொறுத்தவரையில் ரூ.398, ரூ.1198 மற்றும் ரூ.4498 ஆகும்.

புதிய ஓடிடி பிளான்களின் விவரம்

ரூ.398 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். இதில், பயனர்கள் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் 12 ஓடிடி தளங்களின் சந்தாவைப் பெறுகின்றனர். அடுத்ததாக ரூ.1198 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில், 14 ஓடிடி தளங்களின் இலவச சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். 4498 ரூபாய் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 14 ஓடிடிகளின் இலவச சந்தாவைப் பெறலாம். 365 நாட்கள் வேலிடிட்டி. 

மேலும் படிக்க | வெறும் 2 ரூபாய்க்கு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News