வெறும் 2 ரூபாய்க்கு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆஃபர்

Jio prepaid plan benefits: ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு தங்களது சிம் கார்டு எப்போதும் செயலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஈஸியான ரீச்சார்ஜ் பிளான் ஒன்றை வைத்திருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 16, 2023, 11:08 AM IST
  • ஜியோ சிம் செயலில் இருக்க வேண்டுமா?
  • 2 ரூபாய் செலவழித்தால் போதும்
  • வருஷம் முழுவதும் ஆக்டிவாக இருக்கும்
வெறும் 2 ரூபாய்க்கு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆஃபர் title=

Jio SIM active plan: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சிம்மை செயலில் வைக்க பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஜியோவின் மலிவான திட்டத்தின் விலை நாள் ஒன்றுக்கு 2 ரூபாய் மட்டுமே. அதாவது உங்கள் சிம்மை 336 நாட்களுக்கு செயலில் வைத்திருக்க முடியும். இதன் விலை ஒரு நாளைக்கு ரூ.2 மட்டுமே. ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் அதன் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கானது.

ஜியோ ரூ.895 ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் ரூ.895 ரீசார்ஜ் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. 28 நாட்கள் ரீசார்ஜ் சுழற்சியைப் பார்த்தால், அதில் 12 சுழற்சிகள் கிடைக்கின்றன. மேலும் 30 நாட்கள் திட்டத்தைப் பார்த்தால், 11 மாதங்களுக்கும் மேலான வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 24ஜிபி டேட்டாவுக்கு உரிமை உண்டு. இதில் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். இப்போது நாம் அழைப்பைப் பற்றி பேசினால், இதில் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு கிடைக்கும். ரூ.336 திட்டத்தில் 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ் இலவசம். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டம் உங்கள் பட்ஜெட்டுக்கு மிகவும் மலிவானது.

மேலும் படிக்க | Gawasaki W 175: ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் தள்ளுபடி... விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன?

சிம்மை ஆக்டிவ்வாக வைத்திருக்க

ஜியோவின் 336 நாட்கள் திட்டத்தின் விலை 895 ரூபாய். இந்தத் திட்டத்தின் ஒரு நாள் செலவைக் கணக்கிட்டால், அது ரூ.2 ஆகும். அதாவது, ஒரு நாளைக்கு சுமார் 2 ரூபாய் செலவழிப்பதன் மூலம், உங்கள் சிம்மைக் பேசுவதற்கும், அழைப்புகளைச் செய்வதற்கும் செயலில் வைத்திருக்க முடியும். இந்த திட்ட சுழற்சியை 28 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு தோராயமாக ரூ.75 செலவாகும். 30 நாட்களுக்கான செலவு என்று பார்த்தால் ரூ.81 வருகிறது.

நீண்ட வேலிடிட்டி குறைந்த விலையில்

இந்த திட்டம் ஜியோ போன் பயனர்களுக்கு சிறந்த திட்டமாகும். குறைந்த விலையில் நீண்ட கால செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்காக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டம் அவர்களுக்கு மிகவும் சிக்கனமாக இருக்கும். இந்த திட்டம் குறைந்த பட்ஜெட்டில் அதிக பலன்களை அளிக்கிறது. நீங்கள் அதை ஜியோ ஆப் அல்லது Paytm -லிருந்து வாங்கலாம்.

மேலும் படிக்க | 6ஜிபி RAM... ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக... அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அமேசானில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News