அதிக மைலேஜ் தரும் மாருதியின் பெட்ரோல் கார் - தீபாவளி முன்பதிவு தாறுமாறு

விரைவில் மார்க்கெட்டுக்கு வரவுள்ள மாருதியின் பெட்ரோல் கார், அதிக மைலேஜ் தரும் என்பதால் முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 10:34 AM IST
  • தீபாவளிக்கு மார்கெட்டுக்கு வரப்போகும் மாருதி செலிரியோ
  • மற்ற கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த உள்ளது
  • தீபாவளிக்கான முன்பதிவை இப்போதே தொடங்கிவிட்டது
அதிக மைலேஜ் தரும் மாருதியின் பெட்ரோல் கார் - தீபாவளி முன்பதிவு தாறுமாறு title=

மாருதி கார் பிரியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கோலாகலமாக இருக்கப்போகிறது. மாருதி சுஸுகியின் காரின் புதிய பதிப்பு மாருதி சுஸுகி செலிரியோ நவம்பர் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் தீபாவளியையொட்டி முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.

ஒரு காரை முன்பதிவு செய்வது எப்படி?

ஹரியானாவில் உள்ள மானேசர் ஆலையில் புதிய செலிரியோ காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், செலிரியோவின் புதிய பதிப்பை ரூ.11,000 அட்வானஸ் தொகையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ள மாருதி நிறுவனம், மாருதி சுஸூகியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.marutisuzuki.com/ முன்பதிவை பதிவு செய்யலாம் எனக் கூறியுள்ளது. இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட மாருதி ஷோரூமில் கார் முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | ஹோண்டா பம்பர் ஆபர்: குறைவான விலையில் கிடைக்கும் கார்கள்

அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்

நாட்டின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் இது என்று மாருதி தெரிவித்துள்ளது.  ஒரு லிட்டர் பெட்ரோலில் செலிரியோ 26 kmpl வரை சிறந்த மைலேஜ் தருகிறது. சந்தைக்கு வரும்போது, இந்தியாவில் ஏற்கனவே மார்கெட்டில் இருக்கும் Datsun Go, Tata Tiago மற்றும் Hyundai Santro போன்ற கார்களுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தப்போகிறது. 

சிறப்பம்சங்கள் என்ன? 

செலிரியோ காரின் தற்போதைய மாடலில் புளூடூத் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல், இருக்கை உயரம் சரிசெய்தல், பவர் ஜன்னல்கள் மற்றும் மேனுவல் ஏசி போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த காரில் அதிக கேபின் இடமும் கிடைக்கிறது. செலிரியோ காரின் புதிய மாடல், ஏற்கனவே உள்ள மாடலை விட பெரியதாக இருக்கும். இது முன்பை விட அதிக இடவசதியை கொடுக்கும். தோற்றத்திலும் சிறப்பாக இருக்கும் என மாருதி தெரிவித்துள்ளது.  

மாருதி சுஸுகி இந்தியாவின் மூத்த செயல் இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா பேசும்போது, மாருதி செலிரியோ காருக்கு முன்பதிவில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார். புதிய பெட்ரோல் எஞ்சின், பிரத்யேக வடிவமைப்பு வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | டிரெயின் டிக்கெட் முன்பதிவுக்கு பின்னர் பணம் செலுத்தலாம் - Paytm பலே திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News