ஒரு இந்திய வம்சாவளி உட்பட 12 புதிய விண்வெளி வீரர்களை நாசா தேர்வு

Last Updated : Jun 8, 2017, 04:00 PM IST
ஒரு இந்திய வம்சாவளி உட்பட 12 புதிய விண்வெளி வீரர்களை நாசா தேர்வு title=

2017-ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்பிற்கு புதிய 12 விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரி உள்பட 12 விண்வெளி வீரர்களை நாசா தேர்ந்து செய்துள்ளதாக நாசா தனது டிவிட்டர் பாகத்தில் தெரிவித்து உள்ளது. இந்த 12 வீரர்களில் 7 ஆண்களும், 5 பெண் வீரர்களும் இருப்பது குறப்பிடத்தக்கது. 

விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவுக்கு பிறகு தேர்ந்து எடுக்கபட்டு உள்ள இந்திய வமசாவளி விண்வெளி வீரர் ராஜா சாரி ஆவார். ராஜா சாரி நாசாவால் 2017 விண்வெளி வீரர் வகுப்பில் சேர்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பணியை ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறார். 

அயோவா நகரை சேர்ந்தவரான ராஜா 1999-ம் ஆண்டு அமெரிக்க விமானப்படை அகாடமியில் பட்டம் பெற்றார். ராஜா மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிவில் இருந்து ஏரோனாடிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் மாஸ்டர் பட்டம் பெற்றார்.

மேலும் எதிர்கால மனித விண்வெளி ஆராய்ச்சிக்காக 18 ஆயிரம் விண்ணப்பதாரர்களில் இந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

Trending News