இந்திய இராணுவ படையில் அண்டை நாட்டு ஹேக்கர்கள் கைவரிசை...

வெள்ளிக்கிழமை இரவு, நாட்டின் இராணுவ படைகளுக்கு எதிராக ஹேக்கர்களால் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

Updated: Dec 8, 2019, 01:15 PM IST
இந்திய இராணுவ படையில் அண்டை நாட்டு ஹேக்கர்கள் கைவரிசை...
Representational Image

வெள்ளிக்கிழமை இரவு, நாட்டின் இராணுவ படைகளுக்கு எதிராக ஹேக்கர்களால் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலுக்குப் பிறகு, மூன்று படைகளின் சைபர் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 'notice' என்ற தலைப்பில் மின்னஞ்சலை இணைப்போடு வரும் மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி இந்த சைபர் தாக்குதலில் அண்டை நாட்டின் ஹேக்கர்கள் பங்களிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஊடக அறிக்கையின்படி, 'HNQ notice file.xls download' என்ற ஹைப்பர்லிங்க் இணைப்பை கொண்ட ஃபிஷிங் மின்னஞ்சல்கள் இராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுழ. இந்த மின்னஞ்சல்கள் 'PRVINNAAK.598 மற்றும் GOV.IN' மின்னஞ்சல் முகவரியில் இருந்து பிரத்தியேகமாக அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த இணைப்பினை கிளிக் செய்யும் பட்சத்தில் அதிகாரிகளில் கணினி முடக்கப்படுவதாக தெரிகிறது. 

இந்நிலையில் இதுபோன்ற இணைப்போடு மின்னஞ்சல் பெறும் பட்சத்தில் இந்த குறித்து அஞ்ஞல்களை திறக்க வேண்டாம் என முப்படையில் அதிகாரிகளுக்கு இராணுவ சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இத்தகைய அஞ்சல்கள் இன்பாக்ஸில் காணப்பட்டால், ஒருவர் அதைத் திறக்கக்கூடாது, மாறாக இதுகுறித்து புகாரளிக்கவும் அல்லது நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனது அறிக்கையில், மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் பாகிஸ்தான் அல்லது சீனாவிலிருந்து நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்., இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தவுடன், எங்கள் இணைய பிரிவுக்கு தேவையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்பு சைபர் ஏஜென்சி அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ இணைய பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணி சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு இலக்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதாகும்.