முந்துங்கள்: ரூ.5,555 -க்கு பாரத் 5 ஸ்மார்ட்போன்!

வோடபோன் உடன் மைக்ரோமேக்ஸ் இணைந்து தங்கள் பாரத் 5 வாடிக்கையாளர்களுக்கு 50GB இலவச டேட்டாவினையும் வழங்குகிறது.

Last Updated : Dec 2, 2017, 04:14 PM IST
முந்துங்கள்: ரூ.5,555 -க்கு பாரத் 5 ஸ்மார்ட்போன்!

பாரத் வரிசை கைப்பேசிகளை விரிவுப்படுத்தும் வகையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரூ. 5,555 -க்கு பாரத் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது!

5,000 mAh பேட்டரி திரன், 5MP முன் மற்றும் பின்புற கேமராக்கள், இரண்டு நாட்களுக்கு ஓடும் திரன் மற்றும் மூன்று வாரங்களுக்கு ஒரு ஸ்டேன்பை திரன் என இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம்களை பட்டியலிடுகிறது நிறுவனம்.

இந்த சாதனமானது கடுமையான மின்வலு செயல்திறனை எதிர்கொள்ளும் முக்கிய கருவிகளைக் கொண்டுள்ளதாகவும் என, மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் தலைமை வணிக அதிகாரி ஷுபோட்டிப் பால் தெரிவித்துள்ளார்.

மேலும் 5.2 அங்குல HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, அண்ட்ராய்டு நக்கட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1.3 GHz குவாட் கோர் ப்ராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் நினைவகம், 64 ஜிபி வரை விரிவாக்கப்படகூடிய நினைவகம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது!

வோடபோன் உடன் மைக்ரோமேக்ஸ் இணைந்து தங்கள் பாரத் 5 வாடிக்கையாளர்களுக்கு 50GB இலவச டேட்டாவினையும் வழங்குகிறது.

Read in English

More Stories

Trending News