பண்டிகை என்றாலே சலுகை விற்பணைகளும், தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிடும். அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகை வருவதை முன்னிட்டு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பினை வெளியிட தயாராக உள்ளது!
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்காலம் மற்றும் பண்டிகை ரயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலையில் விற்கவும், சாதாரண நாள்களில் சலுகை விலையில் அளிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கேஷ்பேக் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கும். இவற்றை அடுத்த 5 ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும்.
ஜியோ தீபாவளி சலுகை அக்டோபர் 12-ம் தேதி துவங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
தீபாவளி சலுகையை பெற ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் (மதிப்பு ரூ.400) வழங்கப்படுகிறது.
உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் 2017-ம் ஆண்டின் தீபாவளி சலுகையாக 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
The Festival of Flight Sale is here! Book till 13th Oct at fares starting ₹1,149 all-in. https://t.co/RJjbDXf2Wx pic.twitter.com/BCNFUE0piJ
— Vistara (@airvistara) October 11, 2017
டெலிகாம் நிறுவனுங்கள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு புதுத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரூ.149-க்கு வரம்பற்ற டேட்டா திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது!
இத்திட்டத்தின்படி ரூ.149 செலுத்தினால் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ், 2 GB டேட்டாவினை 4G வேகத்திலும் அதன்பின் 64kbps வேகத்திலும் வரம்பற்ற டேட்டாவினை பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் ஏர்டெல் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, புதியதாக 4ஜி சிம்-னை பல சலுகைகளுடன் சேர்த்து 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கவுள்ளது.
இந்த 4ஜி சிம்-ன் விலை ரூ.399 மற்றும் இதன் சலுகைகளாக
வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் வீதம் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்.
84 ஜிபி 4ஜி மொபைல் டேட்டா.
ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.74-க்கு அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மட்டுமே இந்த சலுகையை செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.