64 MP கேமரா சென்சார் பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 64 MP கேமரா சென்சார் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ரியல்மீயின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் சேத், இந்த சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகும் ஸ்மார்ட்போன் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிட்டுள்ளது இந்திய கேஜட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் சீனாவில் தன் தயாரிப்புகளான ரியல்மீ X மற்றும் ரியல்மீ X லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதற்கு பின்னர் ரியல்மீ நிறுவனம் வெளியிடும் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
And to all our dear fans: I promise you #realme will launch this real camera beast first in India before anywhere else. #DareToLeap
— Madhav 5G (@MadhavSheth1) June 24, 2019
64 MP அளவிலான இந்த கேமரா சென்சார், ஒளி குறைந்த நேரங்களில் டெட்ராசெல் தொழில்நுட்பம் மூலம் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, 2019-ல் 5G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக முன்னதாகவே ரியல்மீ நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.