நியூயார்க் : யாகூ நிறுவனத்தின் 2013 ஆண்டின் 300-கோடி டேட்டாக்கள் இணைய திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக் யாகூ தெரிவித்துள்ளது.
யாகூ வாடிக்கையாளர்கள் பலரும் தங்களின் யாகூ கணக்குகளை யாரே ஹேக் செய்துவிட்டதாக புகார் அளித்து வந்தனர். இதுகுறித்து யாகூ தலைமைகத்திற்கு வரும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட்களும் ஹேக் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், டெக்ஸ்ட் தகவல்கள், பேமன்ட் கார்டு தகவல்கள் ,வங்கி கணக்கு விபரம் என அனைத்து தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
இணைய வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில், அதுவும் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.