மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டு இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னுடனும், பட்லர் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியதும். ஆட்டம் தொடங்கிய முதல் அஷ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினார்கள். கடைசியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் தனது முதல் இன்னிங்சில் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து இந்திய அணி தனது பேட்டிங்கை ஆடி வருகிறது.
முதல் இன்னிங்சில் அஸ்வின் 5வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக முறை (23) 5 விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது இந்திய பவுலர் என்ற சாதனையை கபில் தேவுடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் கும்ளே (35), ஹர்பஜன் (25) உள்ளனர்.
மேலும் இதன்மூலம் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 7-வது இடத்தை பிடித்தார். அஸ்வின் 45-வது டெஸ்டில் 239-வது விக்கெட்டை எடுத்துள்ளார்.