பணத்தை பதுக்கி வைத்திருந்ததால் சென்னையில் சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சேகர் ரெட்டி என்பவர் அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது. அவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.