செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் பிரியா வாரியரின் ஒரு ஆடர் லவ் என்ற மலையாள திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார்.
டெல்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாகப் பாடல் பதிவுடன் ஆரம்பமானது.
'பத்மாவதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. அதன் வீடியோ பார்க்க
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'பத்மாவதி' திரைப்படம்.
இப்படத்தில் தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.
இது ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ராணி பத்மாவதியின் கதையை அடிப்படையாகக் கொண்ட படம்
'சோலோ'வை கொன்றுவிடாதீர்கள், கெஞ்சிக் கேட்கிறேன் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் துல்கர் சல்மான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவந்துள்ள திரைப்படம் 'சோலோ'.
'சோலோ' ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தினை பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். மேலும் கோவிந்த் மேனன் இசையமைத்து உள்ளார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் சோலோ திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி ரத்து செய்யக் கோரி நாளை முதல் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை அடுத்து நாளை தமிழகத்தில் சோலோ வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவந்துள்ள திரைப்படம் 'சோலோ'.
துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவரும் திரைப்படம் 'சோலோ'. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியானது.
இந்த வீடியோவினை குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கேஎம் சர்ஜுன் இயக்கத்தில் தமிழின் முன்னனி குணச்சித்திர நடிகர் சத்தியராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் நடித்து வரும் படம் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்”.
படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில், படத்தின் டிரைலரை நேற்று மாதவன் மற்றும் விஜய் சேதுபதி வெளியிட்டார்கள்.
அதன்படி நேற்று மாலை படத்தின் டிரைலரை மாதவன் மற்றும் விஜய் சேதுபதி தனது வெளியிட்டார்.
துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'சோலோ'. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது.
'சோலோ' ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தினை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். கோவிந்த் மேனன் இசையமைகின்றார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாகும் இது. அக்டோபர் மாதம் சமந்தாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், திருமணத்திற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.
கெளதம் கார்த்திக் நடித்துள்ள இவன் தந்திரன் படத்தின் 2 நிமிடக்காட்சிகள் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இவன் தந்திரன். இந்த படத்தை கண்ணன் இயக்கி உள்ளார்.
வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்க இருக்கிறார்.
தற்போது இப்படத்தின் 2 நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.