பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் குஜராத்தில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேல் மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வயது மூப்பு காரணமாக தான் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது ராஜினாமாவை பா.ஜ., தலைமையும் ஏற்றுக் கொண்டது.
பாரதீய ஜனதாவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவும் ஏற்றுக் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.