குஜராத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் அபாரமாக வெற்றி பெற்று உள்ளது. பா.ஜ.க 99 இடங்களும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றியடைந்து உள்ளது. இதனால் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
தற்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆளுநர் ஓபி கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். மேலும் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேலும் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.அதேபோல் பா.ஜ.க-வின் மற்ற அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
புதிய அரசு அமையும் வரை விஜய் ரூபானி இடைக்கால முதல்வராக செயல்படுவார் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிறார். குஜராத்தில் பா.ஜ.க தலைமையிலான புதிய அரசு மீண்டும் சில நாட்களில் அமைக்கப்படும்.
#Gujarat CM Vijay Rupani, Deputy CM Nitin Patel and other ministers submit resignation to Governor OP Kohli. Rupani to remain interim CM till next Govt is formed pic.twitter.com/bIK0540yDY
— ANI (@ANI) December 21, 2017