விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
வியாழக்கிழமையான இன்று காலை டெல்லி போலீசாருக்கு தொலைபேசியில் மர்ம நபர் டெல்லி ஐகோர்டு வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சில மணிநேரத்தில் வெடிக்க உள்ளது என்று மர்ம நபர் கூறினான்.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய டெல்லி போலீசார் கடைசி வரை எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் டெல்லி ஐகோர்டு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் இருந்து மேற்கு வங்காளம் செல்லும் அகல் தஹாத் விரைவு ரயில் நேற்று நள்ளிரவு உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி அருகே சென்று கொண்டிருந்த போது கழிவறையில் டிபன் பாக்ஸ் வடிவிலான மர்மப்பொருள் வைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, பயணிகளின் தகவலையடுத்து ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு இருந்த இரண்டு பெட்டிகள் தனியாக கழற்றி விடப்பட்ட பின்னர், ரயில் புறப்பட்டுச் சென்றது.
வெடிகுண்டுகளை பரிசோதித்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு உடன் ஒரு கடிதமும் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
மேற்கு ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 29 பேர் பலியானர், 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் உள்ள தெர் அபாத் பகுதியில் உள்ள தி ஜவாதி மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பகுதி, பயங்கரவாதிகள் பிரச்னை அதிகமாக உள்ள ஈரான் அருகே உள்ளது.
இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்காத நிலையில், இது Shiite சிறுபான்மை இன மக்களின் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
மத்திய துருக்கியின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கெசேரி குண்டு வெடித்து 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
கெசேரி நகரில் ராணுவ வீரர்களை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இராணுவ பேருந்தில் ராணுவத்தின் கீழ் நிலையில் ரேங்கில் பணியாற்றி வந்த இந்த வீரர்கள் கமோண்டா தலைமை அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்து செல்வதற்கு அனுமதி கிடைத்தையடுத்து பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தனர்.
காங்கோ நாடு உள்நாட்டு கலவரம் காரணமாக கடுமையாக பாதிப்படைத்துள்ளது. அங்கு ஐ.நா. அமைதிப்படையின் 18 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை குறிவைத்து ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், கோமா நகரில் இன்று காலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 32 அமைதிப்படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சிரியாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கு அதிகமான பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு தரப்பு ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே பாலம் ஒன்றின் மீது முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது மேலும் ஒரு வெடிகுண்டை தற்கொலை தீவிரவாதி வெடிக்க செய்துள்ளான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.