பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா அரசியல் செய்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடினார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர். பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலுக்கு கூட அவர் ராணுவத்தை மட்டுமே பாராட்டி இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் முதல்முறையாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
டெல்லி முதல்வரை மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா சந்தித்து பேசினார்.
மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இரோம் சர்மிளா 2000-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்க்கொண்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.
டெல்லியின் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுயுள்ளார், கோல்டன் டெம்பல் என அழைக்கப்படும் சீக்கியர்களின் பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ்க்கு காரில் சென்றார். அப்போது தன் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த இன்னோவா கார் வேகமாக மோதியது. சீட் பெல்ட் அணிருந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
பார்லிமென்ட் 21 செயலாளர்கள் நியமித்த விவகாரம் டில்லி ஐகோர்ட், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பார்லிமென்ட்டில் 21 செயலாளர்களை நியமித்து. இந்த விவகாரம் எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு பணம் எதுவும் இல்லை என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால் அதில் அவர் பேசியிருப்பதாவது:-
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்-சபை எம்.பி-யாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டலடித்து 2014-ம் ஆண்டு பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது மந்திரி மொஹானியாவை கைது செய்தனர்.
என்.எஸ்.ஜி.விவகாரத்தில் பிரதமரின் வெளிநாட்டு கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது:
அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா குறித்து எந்த முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது. மோடியின் வெளியுறவுக்கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. வெளிநாடு பயணத்தின் போது அவர் என்ன செய்தார் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 21 எம்.ஏல்.ஏக்களுக்கு ஆதாய பதவி வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 21 எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.