தேர்தலில் போட்டியிட பணம் இல்லை- அரவிந்த் கெஜ்ரிவால்

Last Updated : Aug 22, 2016, 01:55 PM IST
தேர்தலில் போட்டியிட பணம் இல்லை- அரவிந்த் கெஜ்ரிவால் title=

டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு பணம் எதுவும் இல்லை என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

தெற்கு கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- டெல்லியில் ஒன்றரை ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வரும் நிலையிலும் தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்கு பணம் இல்லை என்பதுதான் உண்மை. எனது வங்கி கணக்கை நான் உங்களிடம் காண்பிக்கிறேன். எங்கள் கட்சியின் வங்கி கணக்கிலும் பணம் இல்லை. இருந்த போதிலும், கோவா மற்றும் பஞ்சாப் மற்றும் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்தை துவங்கியுள்ளோம். டெல்லியில் நாங்கள் போட்டியிடும் போது உண்மையில் போட்டியிட்டது டெல்லி மக்கள் தான். ஒவ்வொருவரும் தங்கள் நல்ல எதிர்காலத்திற்காக போராட சிறந்த தளத்தை ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்தி கொடுத்தது.

கோவாவிலும் இதே போன்ற நிலைதான் உள்ளது. கோவா தேர்தலிலும் உள்ளூர் மக்கள் தான் போட்டியிட உள்ளனர். கோவாவில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால், இங்குள்ள கலாச்சாரம் மேம்படுத்தப்படும். கோவா மக்கள் தான் கோவாவை ஆட்சி செய்வார்கள். இதற்காகத்தான், தேர்தல் அறிக்கை கூட கோவா மக்களால் தயாரிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையை நான் தயாரிக்கவில்லை. மக்களின்  நிலமையை புரிந்து கொள்ள மட்டுமே நான் கோவா வந்தேன்.

கோவாவில் போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளிவைக்க மாநில அரசு விரும்பினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கும் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதன் காரணமாக போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை மூலமாக அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News