H1 B Visa Latest Updates: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக அறிவிப்பு
அமெரிக்காவுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான ஹச்-1 பி பணி விசா வழங்க கட்டுப்பாடு விதிக்கும் அதிரடி உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஹச்-1 பி விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.