தீப்பிடித்து எரிந்த டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை

ஸ்லோவேனியாவில் மெலானியாவின் சொந்த ஊருக்கு அருகில் வைக்கப்படிருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவின் மரச்சிலை எரிந்து போனது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2020, 12:51 PM IST
  • ஸ்லோவேனியாவில் தீப்பிடித்து எரிந்தது டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை
  • ஸ்லோவேனியாவை சேர்ந்த மெலனியா டிரம்பை திருமணம் செய்துக் கொண்ட பிறகு அமெரிக்க குடியுரைமை பெற்றார்
  • வெளிநாட்டினரை வெளியேற்றுவதில் அமெரிக்க அதிபர் உறுதியாக இருக்கும் நிலையில் வெளிநாட்டை சேர்ந்த மெலனியாவின் சிலை எரிந்திருப்பதற்கு அரசியல் சாயம் பூசப்படுமா?
தீப்பிடித்து எரிந்த டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர். அங்கு அவரது சொந்த ஊரில் மெலனியா டிரம்பின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஜூலை 4ஆம் தேதி இரவு அந்த சிலை தீப்பிடித்து எரிந்துவிட்டதாக  அந்த சிலையை வடித்த சிற்பி தெரிவித்துள்ளார்.

மெலனியாவின் மரச்சிலை சிற்பம் தீப்பிடித்த அடுத்த நாள், அந்த இடத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது.  

மெலனியா டிரம்பின் சிற்பத்தை வடித்த அமெரிக்க கலைஞரான பிராட் டவுனி (Brad Downey), சிலை எரிந்த அடுத்த நாளே அதை அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டார்.

Also Read | நவம்பருக்கு முன் பள்ளிகளை திறக்காவிட்டால் நிதியுதவி குறைப்பதாக எச்சரிக்கிறார் Trump

இந்தச் சிலையானது அமெரிக்காவின் அரசியல் நிலைமை குறித்த சர்ச்சைகளை கிளப்பலாம் என்று பிராட் டவுனி நம்புகிறார். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு குடியேற்றத்தைக் குறைப்பதாக உறுதி பூண்டிருக்கிறார்.  அவரை திருமணம் செய்த வெளிநாட்டுப் பெண் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இந்த நிலையில் மெலனியாவின் சிலை எரிந்து போயிருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறலாம்.

வாஷிங்டனில், மெலனியா டிரம்பின் அலுவலகத்தில் சிலை எரிந்துபோனது குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

மெலனியா ஒரு முன்னாள் மாடல், தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் தற்போதைய முதல் பெண்மணி, அமெரிக்காவின் 45 வது அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி. சிறு வயதில் மெலனியா கட்டிடக்கலை படிப்பை படிக்க விரும்பினார், ஆனால் மாடலிங்கில் அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளால், அவரது வாழ்க்கையின் பாதை மாறிவிட்டது. ஐரோப்பாவிலும், பின்னர், நியூயார்க் நகரத்திலும் பல்வேறு வேலைகளைச் செய்து வெற்றி பெற்ற சாதனை பெண்மணி மெலனியா டிரம்ப்.

தொழிலதிபர் டொனால்ட் டிரம்பை 2005 இல் மணந்த பிறகு, 2006 இல் ஒரு அமெரிக்க குடியுரிமை  பெற்றார் மெலனியா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News