சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் ஜூலை 22ம் தேதி அந்தமான் நோக்கிச் சென்ற ஏஎம் - 32 ரக விமானப்படை விமானம் மாயமானது. அதனை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. காணாமல் போன விமானத்தை தேட அமெரிக்க பாதுகாப்பு படையின் உதவியை நாடப் போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த 22ம் தேதி, சென்னையிலிருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற்படை, கடலோர காவல்படை கப்பல்கள் தீவிரமாக தேடி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் சென்னை வந்து தேடும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.