சசிகலா சொத்து குவிப்பு வழக்கு எதிரொலி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 ஆயிரம் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் விதித்தது. பின்னர் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஹாசினிக்கு நடந்த கொடுமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.
பின்பு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் விதித்தது. பின்னர் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
சுப்ரமணிய சுவாமியின் கருத்தினை பாரதீய ஜனதாவின் கருத்தென எடுத்து கொள்ள முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
அதிமுக.,வில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுக.,வுக்கு சட்டசபையில் மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்களும், 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தற்போது எம்எல்ஏ.,க்களில் ஓ. பன்னீர்செல்வம், பாண்டியராஜன், சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன், ஆறுகுட்டி ஆகிய 7 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்க ஆளுநரிடம் உரிமை கோரியும் அவர் முன்வராததால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவங்கிய கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
சென்னையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பெரிய பேனர் வைக்கப்பட்டு அதில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
சசிகலா எச்சரிக்கையால் ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் சசிகலா இன்று கூவத்தூரில்தங்க வைக்ககப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் கவர்னர் மாளிகை முன்பு எம்.எல்.ஏ.,க்களுடன் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி அமைப்பதை குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் தொடர்ந்து நிதானமான போக்கை கடைபிடித்து வருகிறார். இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை. மேலும் அவர் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவரும் அவரை சந்தித்து பேசினார். ஆளுநரிடம் சசிகலா தரப்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்கள். முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அசோக் குமார், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அப்பொழுது நாமக்கல் எம்.பி., பி.ஆர்., சுந்தரம் பேசியதாவது:-
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூல்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார்.
சென்னை: கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை சசிகலா சிய இடத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சசிகலா தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏ தலைமை கூட்டம் கூடியது. அப்பொழுது பெருவாரியான எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ இன்றிரவு டெல்லி சென்று ஜனாதிபதி அவர்களை சந்திப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சசிகலா தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏ தலைமை கூட்டம் கூடியது. அப்பொழுது பெருவாரியான எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள்.
தமிழக அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மை குறித்து நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
அவர் கூறியதாவது:-
We've wasted our freedom years gambling our fanchise on wrong& corrupt politicians. Let's stop blaming them Lets become incorruptable.
அதிமுக.,வில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எப்போதும் வரவேற்பதாகவும், வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லதிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, இன்னும் சற்று நேரத்தில் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை சீண்டாதீர்கள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் இப்போது தமிழக முதலமைச்சரையே மிரட்டி ராஜினமா கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக இருப்பதாக சசிகலா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நேற்று சசிகலா அவர்கள் முதல்வர் பதவியும் தான் ஏற்கா இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இச்சம்பம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலா முதல்வராக பதவியேற்பார். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை'' என்று பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.