சுப்ரமணிய சுவாமியின் கருத்தினை பாரதீய ஜனதாவின் கருத்தென எடுத்து கொள்ள முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
ஆளுநர் சரியான முடிவெடுக்க கால அவகாசம் எடுத்து கொண்டுள்ளார். கவர்னர் தாமதபடுத்தவில்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கண்காணித்து சரியான முடிவு எடுப்பார். ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. பதவி பிரமாணம் செய்வது மட்டும் ஆளுநரின் பணி அல்ல என்றும், அரசியல் சட்டப்படி எவ்வாறு செயல்பட முடியுமோ அந்தளவிற்கு செயல்படுகிறார் என்றார்.
மேலும் சுப்ரமணியன்சாமியின் பாதை தமிழக பா.ஜ.,வின் பாதையல்ல. சுப்ரமணிய சுவாமியின் கருத்தினை பாரதீய ஜனதாவின் கருத்தென எடுத்து கொள்ள முடியாது. அது அவரது தனிப்பட்ட கருத்து. கவர்னரை விமர்சனம் செய்வது சரியல்ல. மிரட்டும் தொனியில் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அவர் கூறினார்.