அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரண்டு அணிகளாக உள்ளன. இந்த இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசரமாக சென்னை வருகிறார். மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று சென்னை வருகிறார்.
இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டார். இதனால் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்குவதில் மகிழ்ச்சியில்லை என்றும், எனவே தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள் வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், எனது பெயரில் நற்பணி மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக பொதுக் குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் பதவியுடன் சேர்த்து அதிமுக-வின் தலைமை பொறுப்பும் சசிகலாவிடமே வழங்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.